திருகோணமலை – அக்போபுர ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளது. ரயிலின் ஒரு பெட்டி தண்டாவாளத்திலிருந்து விலகி கவிழ்ந்துள்ளது.
ரயில் கட்டுப்பாட்டாளர்கள் இருவர் உள்ளிட்ட சிலர் காயமடைந்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விபத்தில் காயமடைந்த 16 பேர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்ஓயாவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலே தடம்புரண்டுள்ளது.