நிலநடுக்கம் காரணமாக தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் 12,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிகள் மெதுவாக நடப்பதால், இடிபாடுகளுக்குள் சிக்கிய உறவினர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மோசமான பாதிப்புக்குள்ளான சில பகுதிகளில் உள்ள குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
துருக்கியில் 8,574 பேரும், சிரியாவில் 2,660 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை (பிப். 6) பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 60 மணி நேரம் கடந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.