நாம் சோர்வாக இருக்கும்போது மோசமான உணவைத் தேர்வுசெய்தால், மீண்டும் மீண்டும் போதுமான தூக்கம் கிடைக்காமல் இருப்பது, எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்குமா?
“போதுமான தூக்கம் இல்லை என்றால், எடை அதிகரிப்பு மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் ஆகியவை ஏற்படுவதற்கான சான்றுகள் இருக்கின்றன” என்கிறார் பேராசிரியர் ஸ்காட்.

இதை ஆதரிக்கும் ஆராய்ச்சியை ஷிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி உதவிப் பேராசிரியரான டாக்டர் எரின் ஹான்லன் மற்றும் அவரது சகாக்கள் நடத்தியுள்ளனர். 2016 ஆம் ஆண்டில், தூக்கமின்மை ரசாயன சமிக்ஞைகளை பாதிக்கிறதா என்றும் அதிக மாவுச்சத்து மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை விரும்பச்செய்கிறதா என்பதையும் அவர்கள் பார்க்க விரும்பினர்.
பசியைத் தூண்டும் கிரெலின் மற்றும் வயிறு நிரம்பிவிட்டதாகக் கூறும் லெப்டின் ஆகிய ஹார்மோன்களின் அளவை மோசமான தூக்கம் எவ்வாறு பாதிக்கிறது என்பதில் ஏற்கனவே உள்ள ஆராய்ச்சிகள் கவனம் செலுத்தின. ஆனால் விஞ்ஞானிகள் மற்றொரு ரசாயன சிக்னலை அளவிட விரும்பினார்கள். அதன் பெயர். எண்டோகன்னாபினாய்டு (eCB) – இது நம்மை ‘அதிக-சுவையான’ உணவுகளை சாப்பிடும் ஆர்வத்தைத்தூண்டக்கூடியது.
தூக்கம் இல்லாதபோது eCB அளவுகள் அதிகரிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்தது. அதனால், ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை சாப்பிடத்தொடங்கிவிடுகிறார்கள்.
“இந்த ஆய்வு மற்றும் மேற்கொள்ளப்பட்ட பிற ஆராய்ச்சிகளைக் பார்க்கும்போது, தூக்கமின்மைக்கும் அதிகமான உணவு உட்கொள்ளலுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாக நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். மேலும் தூக்கமின்மை, உடல் பருமன் அதிகரிப்பதற்கு பங்களிக்கும் காரணிகளில் ஒன்று” என்று டாக்டர் ஹன்லோன் கூறுகிறார். இதை மற்ற நிபுணர்களும் ஆதரிக்கிறார்கள்.