October 2, 2023 11:49 pm
adcode

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நாடு முழுவதும் நகர்கிறது

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கையின் கிழக்கு கடற்கரை வழியாக நுழைந்து நாடு முழுவதும் நகர்ந்து வருகிறது.

 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். கிழக்கு, ஊவா, மத்திய, சப்ரகமுவ, மேல், தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

 

வேறு சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்.

 

நாடு முழுவதும் அவ்வப்போது மணிக்கு (40-50) கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Share

Related News