மார்ச் 9 ஆம் தேதி நிச்சயதார்த்தமாக நடைபெறுகிறதா என்பது தொடர்பாக எதிர்வரும் 8 ஆம் திகதி அறிவிக்க முடியுமாக இருக்கும் என பிரமர் தினேஷ் குணவர்த்தன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பாசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பக்ஷ தலைவர்கள் கூட்டத்தில் அவர் பொதுக் குழுவைச் சந்தித்து கலந்துரையாடும் பேதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தேர்தல் நடைபெறுமா இல்லாயா என்பதையும் அது தொடர்பாக அரசியல் நிலப்பாடு என்ன என்பது தொடர்பாகவும் வினவியுள்ளனர். இதனையடுத்தே அவர் அரச கட்சிகளின் கூட்டம் நடைபெறும் 8 ஆம் திகதி இது தொடர்பாக நிச்சமாக தெரியவரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை நடாத்துவது தொடர்பான தீர்மானம் முற்றுமுழுதாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் நீதி மன்றத்தைச் சார்ந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.