October 2, 2023 11:41 pm
adcode

தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு.

தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் போது எந்த விதமான கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

 

இந்த தடுப்பூசிக்காக பதிவு செய்யும்போது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டத்திற்கு அமைய செலுத்தப்பட வேண்டிய பதிவுக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

 

மாறாக அந்தக் கட்டணம் கொவிட் தடுப்பூசிகாக அறவிடப்படும் கட்டணம் அல்ல என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கல ரன்தெனிய தெரிவித்தார்.

 

Important announcement for those going abroad for employment.

The Overseas Employment Bureau has said that no fees will be charged when the Covid vaccine is given to those who go abroad for employment.

When registering for this vaccine, only the registration fee payable under the Sri Lanka Foreign Employment Act will be considered.

Mangala Randeniya, a spokeswoman for the Sri Lanka Bureau of Foreign Employment, said the fee was not the same as the covid vaccine fee.

Share

Related News