September 28, 2023 2:18 am
adcode

நடமாடும்சுதந்திர தின விழா- நடமாடும் கழிவறைகளுக்கு பதினான்கு மில்லியன் ரூபா

இன்று (04) நடைபெறவுள்ள 75வது தேசிய சுதந்திர தின நிகழ்விற்காக 16 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு கிடைத்த கடிதத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, நடமாடும் கழிவறைகளுக்கு பதினான்கு மில்லியன் ரூபாயும், மின்சாரத் திரைகளுக்கு 2.7 மில்லியன் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக பட்டியல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக 16 நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Related News