October 2, 2023 10:31 pm
adcode

நாட்டின் கடன் பிரச்சினை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்..

நாட்டின் கடன் பிரச்சினையை தீர்க்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணிந்து செல்ல வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லை என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் 07 ஆம் திகதி நடாத்தப்பட்ட பொருளாதார செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடனை திருப்பி செலுத்த எந்தவொரு விடயத்திலும் தங்கியிருக்க வேண்டிய தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை தனியார் நிறுவனங்களின் கடன் சுமை குறித்து ஆளுநர் குறித்து தெரிவிக்கையில், பேச்சு வார்த்தை நடாத்jp, வட்டி விகிதங்களை குறைக்க, வெளிநாட்டு கடன் மற்றும் உள்நாட்டு கடன் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

அரசாங்கத்தின் கடன் சுமைகளை கூடுமானவரையில் குறைப்பதில் கவனம் செலுத்தியுள்ளோம். இலங்கை கடன்களை மட்டும் பெற்றுக் கொள்வதிலிருந்து விலகி கடன் இல்லாதா வரவுகளை உருவாக்கும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

Share

Related News