September 28, 2023 2:20 am
adcode

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!!

அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையிலும் வழமைக்கு மாறாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகக் காணப்படுவதாக, அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் குருசிங்க விஜேசூரிய தெரிவித்தார்.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளத்திற்கு (news.lk) இன்று (23) அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்….

இரண்டு வாரங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 3-4 டெங்கு நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வந்த போதிலும், தற்போது நாளொன்றுக்கு சுமார் 4-5 நோயாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள். எனவே இந்த நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

சிறுவர்களளுக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share

Related News