தற்போது நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் முழுமையாக ஆரம்பிப்பது சாத்தியமில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் விடுதிகளில் தங்கி கல்வி கற்பதனால்; அவர்களிடையே Covid-19 பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ளவாறு பல்கலைக்கழக கட்டமைப்பு தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விடுதிகளில் உள்ள அனைத்து வசதிகளையும் பொதுவாகப் பயன்படுத்துவதனால் மாணவர்களிடையே Covid-19 பரவுவதைத் தடுக்க முடியாது. இவ்வாறானதொரு நிலைமையினால் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களும் வவுனியா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியும் மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.