March 24, 2023 5:59 am
adcode

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்?

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் தமது தனியார் வாகனங்களைப் பயன்படுத்தும் போது அவதானத்துடன் செயற்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

 

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

“நீங்கள் ஏன் வாகனங்களை இறக்குமதி செய்கிறீர்கள்? உண்மையைச் சொல்வதென்றால், இலங்கையில் குறைந்தபட்சம் 3-4 பேர் தனியார் வாகனத்தில் பயணிப்பதை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ”என்று அவர் கூறினார்.

 

“ஒரே ஒருவரால் பல வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஏராளமான எரிபொருள் வீணாகிறது. இந்த நேரத்தில் நாம் புதிய வாகனங்களை இறக்குமதி செய்வது பற்றி சிந்திக்காமல், இருக்கும் வாகனங்களை எவ்வாறு பொறுப்புடன் பயன்படுத்த முடியும் என்பதை சிந்திக்க வேண்டும், ”என்று அவர் மேலும் கூறினார்.

Share

Related News