நாட்டில் விமானங்களுக்கு தேவையான எரிபொருளில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இதுதொடர்பாக தெரிவிக்கையில், விமானங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு தேவையான நிதி செலுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
கடன் தவணைக்கொடுப்பனவு 500 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்ட பின்னர் எதிர்க்கட்சி விமர்சனங்களை மேற்கொள்வது கவலைக்குரிய விடயமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.