June 11, 2023 12:28 am
adcode

நாமல் ராஜபக்ஷவுக்ககு கொழும்பு மேல் நீதிமன்றம் எதிர்வரும் 28ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு!

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

 

நாமல் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது சட்டவிரோதமான முறையில் 30 மில்லியன் ரூபாவை சம்பாதித்து கவர்ஸ் கோபரேட் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு ஏதேனும் கோரிக்கை விடுத்தால் அதனை அன்றைய தினம் சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

Share

Related News