நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு தினங்களில் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அனைத்து அமைச்சுக்கள்இ உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.
கடந்த வருடத்தில் நாட்டில் 25 ஆயிரத்து 900 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். 19 பேர் உயிரிழந்தனர்.