September 26, 2023 9:01 pm
adcode

நாளை(05) முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு!

நாளை(05) முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன.

புதிய பஸ் கட்டணம் தொடர்பான விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி , எதிர்வரும் புதன்கிழமை (05) முதல் பஸ் கட்டணங்கள் 17% இனால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்இ குறைந்தபட்ச கட்டணம் ரூ. 17ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றம் மற்றும் பஸ் உதிரிப்பாகங்களின் விலை அதிகரித்தமை போன்ற காரணங்களைக் கருத்திற்கொண்டு கட்டணங்களில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு பஸ் சங்க பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் கோரியிருந்தனர். இது தொடர்பான  கலந்துரையாடல் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. அதேபோல், பஸ் கட்டணம் 17 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை ஒழுங்குமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

Share

Related News