பொருளாதாரத் துறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று(01) புதுடில்லியில் நடைபெற்றது.
இந்தியா பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கியிருக்கும் ஒத்துழைப்புப் பற்றி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு இதன் போது நன்றி தெரிவித்தார்.
நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.