September 28, 2023 2:13 am
adcode

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் துகள் உறைபனி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2022 ஜனவரி22ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2022 ஜனவரி22ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக உலர்ந்த வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகாலை வேளையில் சற்றுக் குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share

Related News