பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலாவணி பரிமாற்றத்தை இலங்கை கோரியுள்ளது.
அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கலாநிதி A.K அப்துல் மொமன் இதனை உறுதிப்படுத்தினார்.
BIMSTEC உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மோமன் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் பங்களாதேஷிடம் இருந்து இலங்கை 250 மில்லியன் அமெரிக்க டொலரினை செலாவணி பரிமாற்ற அடிப்படையில் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.