வடமேற்கு பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
கோஹாட் மாவட்டத்தில் உள்ள தாண்டா அணையில் ஒரு சமயப் பள்ளி மாணவர்கள் உட்பட மாணவர்கள் குழு ஒன்று படகில் பயணித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் 7 முதல் 12 வயது வரையிலான 10 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
விபத்தில் மூன்று குழந்தைகளை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
விபத்தின் போது கப்பலில் சுமார் 25 குழந்தைகள் பயணித்துள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.