மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பெலவத்தை கோடீஸ்வர வர்த்தகரின் கார் நீர்கொழும்பில் உள்ள கேரேஜ் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொண்டு வந்ததாகக் கூறிய தம்பதியினர் ஏற்கனவே வெளிநாடு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 30ஆம் திகதி இரவு இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகநபர்கள் கடந்த 31ஆம் திகதி வெளிநாட்டில் இருந்ததாகவும் சந்தேகிக்கப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
வர்த்தகரின் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
படுகொலை செய்யப்பட்ட வர்த்தகரின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது