September 26, 2023 8:13 pm
adcode

பயன்படுத்த முடியாத ,பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வோர் தொடர்பில் உணவு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை.

நுகர்வோரால் பயன்படுத்த முடியாத ,பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வோர் தொடர்பில் உணவு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று பொதுமக்கள் சுகாதார பரிசோதகர் சங்கத்தினர். தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கொழும்பு நகரத்தில் உணவுப் பொருட்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கை ஏப்ரல் 16 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என்று தலைமை வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

காலாவதியான ,தரம் குறைந்த பொருட்கள் மற்றும் மனித பாவனைக்கு பொருத்தமற்ற பொருட்கள் சந்தைக்கு வரக்கூடும் என்பதினால் கொள்வனவு செய்யப்படும் பானங்கள் தொடர்பில்,  அதில் குறிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வைத்தியர் விஜயமுனி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கலப்படம் செய்யப்பட்ட பலசரக்கு வகைகள் சந்தையில் இருக்கக்கூடும் என்பதினால் அவற்றை கொள்வனவு செய்யும் பொழுது அதன் மணம், நிறம் உள்ளிட்ட விடயங்களில் பொது மக்கள் அவதானம் வெலுத்த வேண்டும். இந்த நடவடிக்கைக்காக 49 பரிசோதகர்கள் மற்றும் 6 வைத்திய அதிகாரிகள் உள்ளடக்கிய குழு நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

Share

Related News