October 2, 2023 11:57 pm
adcode

பல்கலைக்கழகங்களில் கலை பட்டப்படிப்பு கற்கை நெறியை கற்கும் மாணவர்களுக்கான வாய்ப்பு?

பல்கலைக்கழகங்களில் கலை பட்டப்படிப்பு கற்கை நெறியை கற்கும் மாணவர்களுக்கு கணனி மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பிலான அறிவை பெற்றுக் கொடுப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக பல்கலைக்கழக கலை பீடம் மற்றும் சமூக விஞ்ஞான பீடங்களில் கணனி வள மத்திய நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. சில பீடங்களில் கணனி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்கான தனியான ஆய்வு பிரிவை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சப்ரகமுவ பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கலை பட்டப்படிப்பை கற்ற பெரும்பாலான பட்டதாரிகள் தொழில் வாய்ப்பின்றி இருப்பதை கவனத்தில் கொண்டு அவ்வாறானவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

Share

Related News