இன்று முதல் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு எந்த நாளிலும் பல்கலைக்கழகங்களைத் தொடங்க துணைவேந்தர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குறித்த திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
முதல் கட்டத்தின் கீழ், 2 வாரங்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
கல்வி நடவடிக்கைகளில் முதலில் 25 வீதமான மாணவர்களே பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.