முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். ஃபௌசி நாடாளுமன்ற உறுப்பினராக இன்று (பிப். 9) பதவியேற்றார்.
சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முஜிபுர் ரஹ்மான் ராஜினாமா செய்ததால் வெற்றிடமாக இருந்த இடத்துக்கு அவர் இவ்வாறு பதவியேற்றார்.
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய முஜிபுர் ரஹ்மான் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக பதவியை இராஜினாமா செய்தார்.
அதன்படி, 2020 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, சமகி ஜன பலவேகவின் விருப்புப் பட்டியலில் அடுத்த வேட்பாளராக ஏ.எச்.எம்.பௌசி நாடாளுமன்ற ஆசனத்துக்குத் தகுதி பெற்றார்.