G.C.E O/L பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் பஸ் சேவையில் இருந்து விலகுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊழியர்கள் பேருந்துகளுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக கப்பம் கோருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத் தெரிவித்தார்.
பஸ் ஒன்றுக்கு 100 லீற்றர் எரிபொருள் வழங்குவதற்கு 1000 ரூபாய் கப்பம் கோருவதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, முறையாக டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் G.C.E O/L பரீட்சைக்கு பின்னர் பஸ் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.