September 30, 2023 8:15 am
adcode

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் – உணவகங்களை(canteens) திறக்கவும் அனுமதி

புதிய தவணைக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகின்றன. 
2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக பெப்ரவரி மாதம் 7ம் திகதி மூடப்பட்ட பாடசாலைகள் சுமார் ஒரு மாத காலத்தின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன.  
இதனிடையே, இன்றைய தினம் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேராவினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, 20 மாணவர்கள் கொண்ட வகுப்புகள் வழமை போன்று இடம்பெறும். 21 தொடக்கம் 40 மாணவர்கள் கொண்ட வகுப்பிலுள்ள மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் வகுப்புகள் இடம்பெறும்.
40 இற்கும் அதிகமான மாணவர்கள் கொண்ட வகுப்புகளிலுள்ள மாணவர்களை மூன்று சம குழுக்களாகப் பிரித்து வகுப்புகள் இடம்பெறும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர் எண்ணிக்கைக்கு இணங்க மாணவர்களை அழைக்கவேண்டியதோடு, பாடசாலைக்கு. அழைக்கப்படாத மாணவர் குழுக்களுக்கு மாற்றுக் கல்வி முறைகளைப் பயன்படுத்தி உரிய பாடவிதானங்கள் நடாத்தப்பட வேண்டும்
கல்வி மற்றும் கல்விசாரா பணிக்குழுவினர் வழமைபோன்று சேவைக்குச் சமூகமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ,பாடசாலைகளில் உள்ள உணவகங்களை (canteens)  மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சுகாதார வழி காட்டிகளுக்கு அமைவாக இவை செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Share

Related News