September 28, 2023 4:06 am
adcode

அறிவு சேகரிப்புக்கான தகவல் மூலங்களை விரிவுபடுத்துவதற்கான பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணைய நூலக வசதி.

பாதுகாப்பு அமைச்சு அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.defence.lk இல் இணைய நூலக வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளதை உலகளாவிய பார்வையாளர்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

இந்த இணைய நூலகத்தைப் பயன்படுத்தி தங்கள் அறிவை மேம்படுத்த விரும்புவோருக்கு பல்வேறு துறைசார்ந்த புத்தகங்களின் இணைய பதிப்புக்கள் இலவசமாகக் கிடைக்க வழிசெய்யப்பட்டுள்ளது.

இந்த தனித்துவமான திட்டமானது , பாதுகாப்புத் துறையில் முதன்முறையாக, அறிவு சேகரிப்புக்கான தகவல் மூலங்களை விரிவுபடுத்துவதற்கான ஒரு இணையம் மூலமான தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது மக்களைப் புரிந்துகொள்வதற்கும் தொடர்பு கொள்வதற்கும் சிவில் / இராணுவ ஈடுபாட்டிற்கும் சிறந்த மக்களை உருவாக்க உதவும்.

நாடு ஒரு பிராந்திய அறிவு மையமாக இருக்க வேண்டுமென்பதை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், குறிப்பாக அரச நிறுவனமொன்றின் இத்தகைய முயற்சியானது அந்தத் திசையில் எடுக்கப்பட்ட ஒரு சரியான நடவடிக்கையாக உணரப்படுகிறது.

www.defence.lk/publication/e_book_cat எனும் இணைப்பின் மூலம் புத்தகங்களின் இணைய பதிப்புக்களை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இந்த இலவச வசதியை அனைவரும் இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும், பயன்படுத்தவும் வரவேற்கிறோம்.

Share

Related News