September 28, 2023 2:44 am
adcode

பாராளுமன்றத்தில் அவசியமற்ற மின்குமிழ்களை அணைக்க உத்தரவு.

தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவசியமற்ற மின்குமிழ்களை அணைத்து ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற நடவடிக்கைகளின் ஆரம்பத்தில் சபாநாயகர் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்ற வளாகத்தின் அன்றாட நடவடிக்கைகளிலும் குறிப்பாக உணவகங்களிலும் சில குறைபாடுகள் ஏற்படக் கூடும் என மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறான சிரமங்களை பொறுத்துக்கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய நேற்று (08) பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவசியமற்ற மின்விளக்குகள் அணைக்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share

Related News