குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் சம்பிகா ராமவிக்ரம 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடவுச்சீட்டுகளை ஆன்லைனில் வழங்குவதற்கான விண்ணப்பங்களை திணைக்களம் ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
இந்த புதிய ஆன்லைன் விண்ணப்ப முறையின் மூலம், விண்ணப்பதாரர் கைரேகை போன்ற பயோமெட்ரிக் தேவைகளை பூர்த்தி செய்ய மட்டுமே திணைக்களத்திற்கு செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 பிரதேச செயலக அலுவலகங்களை தெரிவு செய்து ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 கவுன்டர்களை நிறுவுவதற்கு திணைக்களம் தீர்மானித்துள்ளது.