September 30, 2023 7:40 am
adcode

பிரச்சனையை பார்த்து ஏன் திரும்பத் திரும்ப அழுகிறீர்கள்?

பிரச்சனையை பார்த்து ஏன் திரும்பத் திரும்ப அழுகிறீர்கள்?”
❓❓❓❓❓❓

 

ஒருமுறை ஒரு பேராசிரியர், மாணவர்களின் வாழ்வில் வரும் துக்கங்களிலிருந்து விடுபடுவது எப்படி என்று கற்பிக்க ஒரு கருத்தரங்கு நடத்தினார்.

 

பேராசிரியரின் வார்த்தைகளைக் கேட்க ஏராளமானோர் கூடினர். அவர் கூட்ட அரங்கில் நுழைந்து கூட்டத்தினரிடம் ஒரு வேடிக்கையான நகைச்சுவையைச் சொன்னார். அதை கேட்ட கூட்டத்தினர் சப்தமிட்டு அரங்கம் அதிர சிரித்தனர்.

 

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அவர் அதே நகைச்சுவையைச் சொன்னார்,
அப்போது அவர்களில் சிலர் மட்டுமே சிரித்தனர்.

 

மூன்றாவது முறையாக அதே நகைச்சுவையை சொன்னபோது யாரும் சிரிக்கவில்லை.

பேராசிரியர் சிரித்துக்கொண்டே சொன்னார், “ஒரே நகைச்சுவையை கேட்ட உங்களால் மீண்டும் மீண்டும் சிரிக்க முடியாது. அப்படியென்றால், ஒரே பிரச்சனையை பார்த்து ஏன் திரும்பத் திரும்ப அழுகிறீர்கள்?”

ஆம்…..! நாம் தொடர்ந்து பிரச்சனை பற்றி கவலைப்பட்டால், அதுபற்றி புலம்பிக்கொண்டே இருந்தால்..
அதைத் தீர்க்க எம் மனம் ஒருபோதும் எமக்கு இடம் கொடுக்காது.

 

பிரச்சனைக்காக நாம் ஒருபோதும் வருத்தப்படக்கூடாது.

 

ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருக்கிறது என்று நாம் நம்ப வேண்டும்.

 

பொருத்தமான தீர்வு கிடைக்கும் வரை போராட வேண்டும்….

🌸🌸🌸🌸🌸

 

 

அஸ்ஹர் அன்ஸார் FRSPH (UK)
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்

Share

Related News