நாட்டின் பிரதான வைத்தியசாலைகளின் பிரேத அறையில் இனந்தெரியாத சடலங்கள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்ட சடலங்களை வைத்தியசாலைகளில் வைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த பிணவறைகளில், ஒரு வருடத்திற்கும் மேலான அடையாளம் தெரியாத சடலங்கள் குவிந்து கிடக்கின்றன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் இரண்டு வருடங்களுக்கும் மேலான சுமார் அறுபது சடலங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் களுபோவில போதனா வைத்தியசாலையின் இருபத்தெட்டு இனந்தெரியாத சடலங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலைமையின் அடிப்படையில் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட சடலங்களை உரிமையாளர்கள் மற்றும் தெரியாத சடலங்களை ஏற்றுக்கொள்வதை நேற்று (6) முதல் தற்காலிகமாக நிறுத்த வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாளாந்தம் இனந்தெரியாத சடலங்களை வைத்தியசாலை பிரேத அறையில் கொண்டு வரும்போது பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சாகரி கிரிவந்தெனிய தெரிவித்தார்.
வைத்தியசாலையின் பிரேத அறையில் அடையாளம் தெரியாத சடலங்கள் குவிந்து கிடப்பது தொடர்பில் வைத்தியசாலை அதிகாரிகள் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளனர்.
வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட இனந்தெரியாத சடலங்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் அவதானித்து பராமரிப்பாளர்களை கண்டறிந்து பிரேத பரிசோதனைக்கு அனுப்புமாறு வைத்தியசாலை அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.