கொவிட் வைரசை தொற்றை கட்டுபடுத்தும் வேலைத்திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்ற பூஸ்டர் அல்லது மூன்றாவது டோஸ் தடுப்பூசியை தாமதமின்றி விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொண்டுள்ள 13 மில்லியன் மக்கள் தொகையில், இதுவரையிலும், சுமார் 3 மில்லியன் பேர் மாத்திரமே பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்