இருபதுக்கு 20 உலகக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இன்று அதிகாலை தென்னாபிரிக்கா நோக்கி பயணமாகியுள்ளது.
15 விளையாட்டு வீராங்கனைகளும் 10 அதிகாரிகளும் இந்தப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு உலகக் கோப்பையில் இலங்கை அணி “ஏ” குரூப்பின் கீழ் போட்டியிட உள்ளது.
இந்த ஆண்டுக்கான போட்டித் தொடரில் இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி எதிர்வரும் 10ஆம் திகதி தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.