பொரளை- கொட்டாவை பிரதான வீதியின் பெலவத்தை சந்திக்கு அருகில் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமையல் எரிவாயு கோரி அப்பகுதி மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.