September 25, 2023 5:51 am
adcode

பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் கூறியுள்ள விளக்கம்?

மக நெகும வீதி நிர்மாண இயந்திரக் கம்பனியின் பூரண மேற்பார்வையின் கீழ்  முன்னெடுக்கப்படும் படகமுவ வாகனத் தரிப்பிடம் மற்றும் சுகாதார வசதி நிலையத்தின் நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக   ஆளும் தரப்பு பிரதம  கொறடா  நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் அங்கு   மேற்பார்வை விஜயமொன்றை மேற்கொண்டார்
. விஜயத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்…..
உலகம் முழுவதும் கோவிட் தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளது. பலம் வாய்ந்த நாடுகளில் கூட வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஆனால்  தொற்று நோய் நிலைமையில்   பொருட்களின் விலையை அதிகரிக்காமல் எப்படியாவது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வருகிறோம். ஆனால் நாங்கள்  விருப்பமில்லாத நிலையிலும் கூட  இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது. வேறு வழியில்லை.
பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த  அமைச்சர் ,
பொருட்களின் விலை மேலும் உயர்ந்து வருகிறது. தொற்றுநோயிலிருந்து விடுபடும் வரை இந்த சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதை புத்தியுள்ள மக்கள்  புரிந்து கொள்ள வேண்டும். யார் பொருட்களின் விலையை அதிகரிக்க விரும்புகிறார்கள். இது அனைத்து சமூகங்களையும் பாதிக்கும் ஒன்று. விருப்பமில்லா நிலையிலும் கூட நாம் அனைவரையும் பாதுகாக்கக் கூடிய  ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படும். அந்த இழப்பை ஈடுகட்ட அனைவரிடமும் வரி வசூலிக்க வேண்டும். வாகனங்களை பயன்படுத்தாதவர்களும் வரி செலுத்த வேண்டும். நஷ்டத்தை ஈடுகட்ட வரி விதிக்கப்படும்போது, ​​ வாகனம் பயன்படுத்தாதவர்கள் கூட வரி செலுத்த வேண்டியுள்ளது. அதனால் விருப்பமின்றி  இந்த முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது.
இலங்கையில் தற்போது பாவனையில் உள்ள எரிவாயுவின் கலவை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ,
எரிவாயு தொடர்பில்  பிரச்சினை உள்ளது. இது ஒரு கவலைக்குரிய நிலை. இது  குறித்து கவனிக்கப்பட வேண்டும். இங்கு ஒரு நாசகாரசெயல்   இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் அரசாங்கம் என்ற வகையில் இதனை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. நாட்டுக்கு வந்துள்ள கப்பல்களை பார்த்து சான்றிதழ் பெற்று அதை பற்றி  ஆராய  வேண்டும். இந்த புத்தாண்டு காலத்தில்  மக்கள் கஷ்டப்படுவதற்கு இடமளிப்பது நல்லதல்ல. ஒவ்வொருவருடைய குறைபாடுகளும் இதற்குக் காரணம் என்று நான் பார்க்கிறேன்.
Share

Related News