இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்கு பங்களாதேஷ் முன்வந்துள்ளது.
இதன் அடிப்படையில் பங்களாதேஷ் இல் இருந்து உருளைக்கிழங்கு, இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆலோசித்துவருகிறார்.
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) செயலாளர் நாயகம் எசல ருவான் கணபாபனில் வீரகோனை சந்தித்த போது பங்களாதேஷ் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்று நோய் மற்றும் உக்ரைன்-ரஷ்யா போரைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் உணவுப் பிரச்சினையை எதிர் கொண்டுள்ளதாகவும், அதிகளவு உணவுப் பயிர்களை வளர்க்க பங்களாதேஷ் நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பங்களாதேஷ் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு உப்பு மற்றும் வறட்சியை தாங்கும் அரிசி வகைகளை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.
தொடர்ந்து கூறுகையில் தனது நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தொற்று நோய் காரணம் என்றும்,
இலங்கையில் அரிசி உற்பத்தி 50% குறைந்துள்ளதால் இலங்கைக்கு தற்போது உரம் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், வறுமைக்கு எதிரான இந்த போராட்டத்தில் தெற்காசிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும், “நாம், இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள், ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும் எனவும் நாம் எந்தவொரு பிரச்சனைகளையும் கலந்துரையாடுவதன் மூலமாக தீர்க்க முடியும்,” எனவும் வலியுறுத்தினார்.
மேலும் சார்க் விவசாய மையத்திற்கு பங்களாதேஷின் இவ்வாறான பங்களிப்புக்காக வீரகோன் மிகவும் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.