September 30, 2023 9:10 am
adcode

மக்கள்தொகையில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதா?

பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து இந்திய அரசு நடத்திய மிக விரிவான கணக்கெடுப்பான தேசிய குடும்ப நல ஆய்வு (5)-இன் முடிவுகள் வெளியானபோது, ஒரு தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

1,000 ஆண்களுடன் ஒப்பிடுகையில் 1,020 பெண்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பில், 1,000 ஆண்களுக்கு 943 பெண்கள் என கணக்கிடப்பட்டது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தேசிய குடும்ப நல ஆய்வு என்பது ஒரு ‘மாதிரி கணக்கெடுப்பு’.ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ‘ சரியான எண்ணிக்கை’ ஆகும்.

தேசிய குடும்ப நலஆய்வு (5) ல், சுமார் ஆறு லட்சம் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டன. அதே நேரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டின் 125 கோடி மக்களையும் உள்ளடக்கிய கணக்கெடுப்பாகும்.

ஆண் மற்றும் பெண் பாலின விகிதத்தை அறிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் நம்பகமான முறையாகும் என்று இன்ஸ்டிட்யூட்டில் ‘இடப்பெயர்வு மற்றும் நகரமயமாக்கல் ஆய்வுகள்’ பேராசிரியர் ஆர்.பி.பகத் கூறுகிறார்.

CBSE (2016) தேர்வு முடிவுகளில் மாணவர்களை ஒப்பிடுகையில் சிறப்பாக செயல்திறனை வெளிப்படுத்திய மாணவிகளின் கொண்டாட்டம்.

பெண்களின் சராசரி ஆயுட்காலம் (life expectancy at birth) ஆண்களைக்காட்டிலும் அதிகமாக இருப்பது இதற்கு ஒரு காரணம் என்கிறார் சங்கீதா ரேகே.

Share

Related News