September 25, 2023 5:26 am
adcode

மத்தள விமான நிலையத்திற்கும் உஸ்பெகிஸ்தானுக்கிடையில் நேரடி விமான சேவை

மத்தள விமான நிலையத்திற்கும் உஸ்பெகிஸ்தானுக்கிடையில் நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளது.

உஸ்பெகிஸ்தான் விமான சேவைக்கு சொந்தமான UZB 3525 என்ற விமானம் 135 சுற்றுலா பயணிகளுடன் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது.

குளிர்பருவ காலத்தில் இலங்கையை இலக்காகக் கொண்டு இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தின் மூலம் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் , வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Related News