September 28, 2023 3:07 am
adcode

மத்திய மாகாணத்தில் பயிற்சியை நிறைவுசெய்த 4,545 பயிற்சி பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள்.

மத்திய மாகாணத்தில் பயிற்சியை நிறைவுசெய்த 4,545 பயிற்சி பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பல்லேகலையிலுள்ள மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூகமகே தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.

பயிற்சியாளர்களாக பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டிருந்த 2,616 பேரும், உள்ளூராட்சி அமைப்புக்களில் நியமிக்கப்பட்டிருந்த 705 பேரும் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
இவ்வைபவத்தில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ச,. உதயன கிரிந்திகொட, நாலக்க கோட்டேகொட, கண்டி மாவட்ட பிரதான செயலாளர் காமினி ராஜரட்ன  பலர் கலந்து கொண்டனர்.

Share

Related News