மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து குறித்து எந்தவொரு பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்று (04) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு அரசாங்கம் புதிய சலுகைப் பொதியை அறிவித்துள்ளதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு அழுத்தங்களுக்கும் அடிபணிய மாட்டோம். மக்களுக்கு நிவாரணம் வழங்கவே இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.