October 3, 2023 12:43 am
adcode

மாணவர் ஒருவரால் கண்டறியப்பட்ட பால்வெளி மண்டலத்தில் சுழலும் விசித்திரமான பொருள்.

ஆஸ்திரேலியாவின் கதிர்வீச்சு வானியல் ஆராய்ச்சிக்கான சர்வதேச மையத்தில் (ICRAR – International Centre for Radio Astronomy Research), தைரோன் ஓ’டோஹெர்தி என்பவர் இளங்கலை மாணவராக சேர்ந்தார். அப்போது, பிரபஞ்சத்தில் உள்ள கதிர்வீச்சு அலைகளை (Radio Waves) ஆராய உதவும் கணினி நிரலை வடிவமைப்பதே அவரது முக்கிய குறிக்கோளாக இருந்தது.

அதற்கு பதிலாக, 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், நம் பால்வெளி மண்டலத்தில் ஓர் அறியப்படாத சுழலும் பொருளை அவர் கண்டறிந்தார். பல மாத பரிசோதனைகளை தொடர்ந்து, இறுதியாக இந்த ஜனவரியில் நேச்சர் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்த கண்டுபிடிப்பு குறித்து அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, 22 வயதான ஓ’டோஹெர்தி பிபிசியிடம் கூறுகையில், “நான் சில கணினி குறியீடுகளை எழுத முயற்சி செய்துக்கொண்டிருந்தேன்.” என்கிறார். “வானத்தில் நடப்பவை எதுவும் ஏன் நடக்கிறது என்று நமக்கு தெரியாது. “மேலும் இது நான் முதல் நிலையில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற உதவியது. அதனால், எந்த புகாரும் இல்லை,” என்று கூறி அவர் சிரிக்கிறார்.

எதிர்பாராத எதுவும் வானியலாளர்களை உற்சாகப்படுத்தும் என்கிறார் ஓ’டோஹெர்தி.

இந்த பொருள் நிச்சயமாக அத்தகைய ஒன்றில் அடங்கும்.

“உதாரணமாக, இது வழக்கமான நியூட்ரான் நட்சத்திரங்களை விட மிக மெதுவாக சுழல்கிறது,” என்று அவர் விளக்குகிறார்.

“அது என்னவென்று யாருக்கும் சரியாகத் தெரியாது. அதுதான் எதிர்பார்ப்பை தூண்டும் விஷயமும் கூட,”என்று முடிகிறார் அவர்.

Share

Related News