தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா தொற்று கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார நிறுவனம்(W.H.O) வகைப்படுத்தியுள்ளது.
கிரேக்க எழுத்து முறைப்படி அதற்கு ‘ஒமிக்ரோன்’ எனவும் பெயரிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் திகதி முதல்முறையாகக் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா, பாட்ஸ்வானா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்குப் பரவியுள்ளது.
‘பி.1.1.529’ என்ற குறியீடு இடப்பட்டுள்ள அந்த வகைக் கொரோனா, இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களையும் தொற்றியுள்ளது.
அது, தற்போது மிக வேகமாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனாக்களை விட அதிக தீவிரமாக மனிதா்களிடையே பரவும் என்று அஞ்சப்படுகிறது.