உயர்தரப் பாடசாலைக் காலத்தில் ஏற்பட்ட மின்வெட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (30) கொழும்பு 12, கெசல்வத்தையில் உள்ள குணசிங்க சிலைக்கு அருகில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உயர்தரப் பாடசாலைக் காலத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என மனித உரிமைகள் ஆணைக்குழு, மின்சார சபை மற்றும் அமைச்சுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை மீறி இன்று மாலை 6.45 மணியளவில் மின்வெட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.