பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்வெட்டுக்கு அனுமதி வழங்காவிட்டாலும் மின்வெட்டை தொடர வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் பல்வேறு மின்வெட்டுகளை இடைநிறுத்த முடியாது என அதன் தலைவர் திரு.நளிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.
அக்காலப்பகுதியில் மின்வெட்டு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு நான்கு பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகை தேவைப்படுவதாகவும் தலைவர் தெரிவித்தார்.
மின்வெட்டு இடைநிறுத்தப்படும் என இலங்கை மின்சார சபை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருளின்றி மின்சாரம் வழங்க முடியாது எனவும், எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணங்கினால் எரிபொருள் வழங்கப்பட வேண்டும் எனவும், அது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மின்சார சபை அதிகாரிகளும் கலந்து கொண்ட போதும் அங்கு மின்வெட்டை நிறுத்துவதற்கு உடன்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.