September 26, 2023 10:09 pm
adcode

மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாகv டெங்கு’ நோய்.

டெங்கு நோய் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

இது தொற்றுநோய் அனர்த்த நிலையை ஏற்படுத்தும் வகையில் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

கடந்த வருடத்தில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றைத் தடுப்பதற்காக நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை கடந்த 20ம் 21ம் திகதிகளில் இடம்பெற்றன. சுத்தமான ‘சூழல் ஆரோக்கியமான சமூகம்’ என்ற தொனிப்பொருளில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மாகாண மற்றும் உள்ளராட்சி மன்ற அமைச்சு இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளமை விசேட அம்சமாகும்.

Share

Related News