தரமான பசளையை வழங்க வேண்டும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவுக்குச் செலுத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
இரு தரப்புக்களினதும் கருத்துக்களை ஆராய்ந்ததன் பின்னரே சீனாவிலிருந்து வந்த பசளை கப்பல் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. சீனாவின் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமியான பிணையும் வைப்புச் செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.