September 26, 2023 10:16 pm
adcode

முதுந்துவ, இப்பாகமுவயில் மாபெரும் இரத்ததான நிகழ்வு.

மாபெரும் இரத்ததான நிகழ்வு – முதுந்துவ, இப்பாகமுவ.

ஹொகரல்ல பொலிஸ் நிலையமும் இலக்கம் 526 மடிகே முதுன்துவ மக்கள் பாதுகாப்பு கமிட்டியும் இணைந்து முதன்முறையாக மாபெரும் இரத்ததான நிகழ்வை நேற்று (2ம் திகதி, திங்கட்கிழமை) வெகு சிறப்பாய் நாடாத்திமுடித்தது.

 

இவ் இரத்ததான நிகழ்வுக்கு இன,மத,மொழி பேதமின்றி மூவின ஊர்மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

அரசியல் வாதிகள் வருகையளித்து உறுதுணையாய் நின்றது மட்டுமன்றி அனுசரனை வழங்கியமை விஷேட அம்சமாகும்.

 

இந்நிகழ்வுக்கு ஊடக அனுசரனையை ஜவய மீடியா வழங்கியதுடன் இரத்தம் வழங்கிய நல்உள்ளங்களுக்கு சமூர்த்தியால் சான்றிதழ் வழங்கப்பட்டது மட்டுமன்றி ஏற்பாட்டுக்குழுவால் அன்பளிப்புப் பொதியொன்றும் வழங்கப்பட்டமை வரவேற்கத்தக்க
விடயமாகும்.

 

பின்த் அமீன்

 

படஙகள்

Share

Related News