September 26, 2023 10:35 pm
adcode

முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கை இராணுவம் தயார்நிலையில் – இராணுவத் தளபதி தெரிவிப்பு

இலங்கை இராணுவம் பல்வேறு பயிற்சித் தொகுதிகள் மற்றும் பயிற்சிகளையும் அறிமுகப்படுத்தும் அதேவேளை நடைமுறைக்கு உகந்த வகையிலான மிக உயரிய போர்த் தயார்நிலையைகளைப் பேணுகிறது. எல்.ரீ.ரீ.ஈ உடனான மூன்று தசாப்த கால மோதலின் போது பெறப்பட்ட சொந்த அனுபவங்களின் அடிப்படையில் திறனமிக்க நவீன போர் நுட்பங்களுடனான எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராகிவருகிறது.

போர் அல்லது சமாதானம் உள்ளிட்ட எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் ஒரு சிப்பாய் எப்போதும் தோற்கடிக்க முடியாத சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் நவீன எதிரிகள் வழக்கத்திற்கு மாறானவர்கள், குறிப்பாக அவர்களின் சிறிய செயற்பாடுகள், மிகப்பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடியவை.

அதேபோல் 20 ஆம் நூற்றாண்டில் நாடுகளுக்கிடையில் ஏற்படக்கூடிய மோதல்களானது அந்த நாடுகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளதை போன்றே மற்றைய நாடுகளுக்கும் சிக்கல்களை தோற்றுவிக்க கூடியதாக உள்ளது.

இராணுவ அழுத்தமானது அதிக சவால் நிலைமைகளாக காணப்படும் பொருளாதார, இராஜதந்திர மற்றும் உளவியல் நெருக்கடிகள் ஆகியவற்றுடன் பிணைந்ததாக காணப்படுகிறது. அடிப்படைவாதம் மற்றும் கருத்தியல் அடிப்படையிலான மோதல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாக நவீன எதிரிகளை பொறுத்தவரையில் நபர்கள் மற்றும் ஆயுதங்களை விடவும் அவர்கள் கையாளும் வழிமுறைகள் மிகவும் சிக்கலான வகையில் அமைந்துள்ளன என்று பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் 08.12.2021 காலை சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் 15 ஆம் இலக்க பாடநெறியை பூர்த்தி செய்து ‘பிஎஸ்சி’ பட்டம் பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இளங்கலை அதிகாரிகளுக்காக நிகழ்த்திய உரையில் சுட்டிக்காட்டினார்.

‘சமகால பாதுகாப்பு பரப்பிற்குள் ஆயுதப்படைகளின் வகிபாகம்’ என்ற தொனிப்பொருளில் உரை நிகழ்த்தியிருந்த இராணுவத் தளபதி, இன்றைய பன்முக மற்றும் சிக்கலான பாதுகாப்பு சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கு இராணுவப் படைகளை நேரடியாகப் பயன்படுத்துவதை விட முறையான, விரிவான மற்றும் பின்னிப்பிணைந்த அணுகுமுறைகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றார்.

“பாதுகாப்பு சார் சூழ்நிலைகள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது, அதனால் நேரடியான தீர்மானங்களை எடுப்பது கடினமாக அமைந்துள்ளது. எனவே, முன்னைய அனுபவத்தை வைத்து அடுத்த நெருக்கடியை நம்மால் வெல்ல முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் உங்களுக்கு கொடுக்கக்கூடிய சிறந்த உதாரணம் கொவிட் 19. தொற்றுநோய்; ஒரு சிறிய வைரஸ் அனைத்து வழக்கமான பாதுகாப்பு பரிமாணங்களையும் மிஞ்சும் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாம் எப்போதாவது நினைத்திருக்கிறோமா? ”என்று அவர் வினவினார்.

இலங்கையின் முப்படையினருக்காக சர்வதேச தரத்திலான கற்பித்தல்களை வழங்கும் களமான சபுகஸ்கந்தவில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக வருகை தந்திருந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு நுழைவாயில் வளாகத்தில் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனையடுத்து பாதுகாப்பு கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், பாடநெறி எண் – 15 இன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இளங்கலை பட்டதாரிகளால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் எண்-15 பாடநெறியில், பாகிஸ்தான், பங்களாதேஷ், ருவாண்டா, மாலத்தீவு, இந்தோனேசியா, நேபாளம், அமெரிக்கா, செனகல் மற்றும் சவுதி அரேபியாவை உள்ளிட்ட 17 நாடுகளை சேர்ந்த 144 இளங்கலை பட்டதாரிகள் கலந்துகொண்டனர். அவர்களில் 78 இராணுவ அதிகாரிகள், 23 கடற்படை அதிகாரிகள், 26 விமானப்படை அதிகாரிகளும் பீஎஸ்சீ பட்டத்தை பெற்றுகொண்டனர்.

பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் அக்கல்லூரிக்கு வருகை தந்த விரிவுரையாளருக்கு அன்பான வரவேற்பளித்ததோடு, நிகழ்வின் பங்கேற்பாளர்களுக்கும் அறிமுகம் செய்தார்.

அதேபோல் நிகழ்வின் நிறைவம்சமாக இடம்பெற்ற கேள்வி-பதில் அமர்வைத் தொடர்ந்து இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா அவர்களுக்கு சிறப்பு நினைவு பரிசொன்றை வழங்கி நன்றிகளையும் கூறிக்கொண்டார். கல்லூரி வளாகத்திலிருந்து விடைபெறும் முன்பாக தளபதியவர்களால் கல்லூரியின் விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் இளங்கலைப் பட்டதாரிகளுக்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “வழக்கமான முறைகளை விட எதிரிகளுக்கு பல வழிமுறைகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தீவிரவாத குழுக்கள் இன்று பொது மக்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அணுகுமுறைகளை முன்னெடுக்கின்றனர். மிகவும் சூட்சுமான முறையில் ஆட்சேர்ப்பு, தூண்டுதல், பிரச்சாரம் மற்றும் ஆயுதங்கள் கொள்வனவு செய்தல் மற்றும் வரையறையற்ற பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். அதனால் ஒற்றுமைக்கான தேசிய பொறிமுறைகளுடன் இணங்கிச் செயற்பட நாம் மறுக்கின்ற பட்சத்தில் நமது தேசிய பாதுகாப்பு கட்டமைப்பில் மாற்ற முடியாத இடைவெளிகள் ஏற்படுவதற்கு இடமளித்துவிடுவோம். “சாதிக்க முடியாத இலக்குகளையும் அடைவதற்கான ஒரே கருவியாக ஒற்றுமை மட்டுமே உள்ளது என்று நான் நம்புகிறேன்”. இந்த பரந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டுதான் இலங்கை இராணுவத்தின் 2020 – 2025 முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விரிவான மூலோபாய திட்டமிடலை செயற்படுத்துவதற்கு நாடு எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பது தொடர்பிலான மூலோபாய சிந்தனைகளை கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. அதேபோல் 2020 – 2025 முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் அதிமேதகு ஜனாதிபதியவர்களின் “சௌபாக்கியத்திற்கான தெரிவு” என்ற கொள்கைத்திட்டத்துடன் எவ்வாறு பொருந்துகிறது என்பது குறித்தும் விரிவான புரிதலை கொண்டிருப்பது அவசியமாகும். அத்தோடு நமக்கான பயிற்சிகள் இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்புச் சூழ்நிலை மற்றும் அதற்குள்ளான ஆயுத படைகளின் வகிபாகம் பாதுகாப்பு கொள்கைகள் அதற்கு தகுந்த படைகளின் கட்டமைப்பு மற்றும் திறன் ஆகியவை தொடர்பான புரிதல்களை ஏற்படுத்த கூடிய வகையில் அமைந்திருக்க வேண்டியதும் அவசியமாகும். அதேபோல் மேற்படி காரணிகளை மீளாய்வு செய்து ஆயுத படையினரை அர்ப்பணிப்பு மற்றும் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளகூடிய வகையிலும் கட்டமைக்க வேண்டியது அவசியமாகும் எனவும் ஜெனரல் ஷவேந்திர சில்வா வலியுறுத்தினார்.

“அண்மைய காலங்களில், இராணுவம் குறிப்பாக போர்ச் சூழலுடன் தொடர்பற்ற பணிகளை மேற்கொண்டது, எதிர்காலத்திலும் இவ்வாறான பணிகளை தொடர நேரிடலாம். எனவே, நமது ஆயுதப் படைகள் அதற்கு தகுந்த வகையில் முழுமையாக பயிற்றுவிக்கப்படவேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற வகையில் உரிய வளங்கள் மற்றும் சட்டங்கள், அதிகாரங்களுடன் பாதுகாப்பு தொடர்பான வகிபாகத்தை பேண வேண்டும், மேலும் புதிய மூலோபாய ரீதியில் வரையறுக்கப்பட்ட மற்றும் நியாயமான நோக்கங்களுக்காக ஆயுதப்படைகளை பயன்படுத்துவதன் மூலம் நிறுவன கட்டமைப்பின் மட்டத்திலும் சர்வதேச அளவிலும் பொறுப்புகூறலுடன் செயற்பட முடியும் என்றும் கூறினார்.

இராணுவத் தளபதியின் உரையின் முக்கிய விடயங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

“நான் கல்வி பயின்ற கல்விக்கூடத்தில் உங்களுக்கு உரை நிகழ்த்துவதை மரியாதையாகவும் பாக்கியமாகவும் கருதுகிறேன்.

இந்த மதிப்புமிக்க நிறுவனம் கட்டளைகள், திறன், அறிவுசார் ஊழியர்களை கொண்ட்ட கூட்டிணைப்பாகும்.முப்படை அதிகாரிகளுக்கும் நிறுவனத்தில் உயர் பொறுப்புகளை வழங்க வேண்டும் வலியுறுத்தியதன் விளைவாக இன்றைய நிலைமைக்கு என்னை உருவாக்கிய பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரிக்கு உயர்வான மரியாதையை செலுத்துகிறேன்.

அதேபோல் ஆரம்ப கட்டத்தில், ஒரு அதிகாரியின் தொழில் வாழ்க்கையின் மிக முக்கியமான அடைவை ஒன்றை நீங்கள் நிறைவு செய்கிறீர்கள் என்பதை நினைவூட்டுகிறேன். எனவே, இந்த நிறுவனத்திலிருந்து கற்றல் மற்றும் வடிவமைப்பை உங்கள் ஆளுமை, தொழில்முறை மற்றும் சிந்தனை முறை ஆகியவற்றை ஊக்குவிப்பாக எடுத்துக் கொண்டு உங்களது முன்னேற்றத்தை ஆரம்பிக்க வேண்டும்.

மேலும் நமது நட்பு நாடுகளைச் சேர்ந்த பயிலிளவல் அதிகாரிகள் தொடர்பாக சிறப்பாக எடுத்துரைக்க விரும்புகிறேன். சர்வதேச மாணவர்களின் பங்கேற்பானது, வெவ்வேறு கலாச்சார், கல்வி, கோட்பாடு மற்றும் தனிப்பட்ட மாறுபாடுகளின் அடிப்படையில் வெவ்வேறு கொள்கைகளின் கீழ் எவ்வாறு நிலைமையைக் காண முடியும் என்பதை விளங்கிக்கொள்வதற்கு பயிலிளவல் அதிகாரிகளுக்கு வாய்ப்பாக அமையும் என்றும், அதனால் பாடநெறிக்கு மெலும் தரம் சேர்க்கப்படுகிறது எனவும் இப்பாடநெறியின் போது நீங்கள் கொள்கை ரீதியான, தந்திரோபாய மற்றும் கொள்கை ரீதியான அறியியல் திறன்களை மேம்படுத்துகொண்டிருப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

Share

Related News