June 10, 2023 10:21 am
adcode

முன்பு நடைமுறையில் இருந்தபடி வெளியில் முகக்கவசம் அணியவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டது.

முகக்கவசம் தொடர்பான தனது முந்தைய முடிவை சுகாதார அமைச்சகம் மாற்றியுள்ளது.

 

ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

 

ஆனால், பொது போக்குவரத்து மற்றும் உட்புற செயல்பாடுகளின் போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவர் கூறினார்.

 

இருப்பினும், அமைச்சரின் முந்தைய அறிவிப்பை மாற்றியமைத்து சுகாதார அமைச்சகம் இன்று(21) புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 

நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் பாரிய பொதுக் கூட்டங்களை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிவதற்கான கட்டாயத் தேவையை நீக்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

 

முன்பு நடைமுறையில் இருந்தபடி வெளியில் முகமூடிகளைமுகக்கவசங்களை அணிய வேண்டும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

இந்த புதிய முடிவு இன்று, 21 ஏப்ரல் 2022 முதல் அமலுக்கு வருவதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

Share

Related News