March 23, 2023 5:11 pm
adcode

மூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன் ஹந்துங்கொட கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன் ஹந்துங்கொட கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மே 09ஆம் திகதி அலரிமாளிகைக்குள் புகுந்து ஆர்ப்பாட்டக்காரர்களை ஊக்குவித்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஒத்துழைக்காமல் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Share

Related News